பெங்களூரு

பெங்களூரில் பிப். 13 முதல் பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி தொடக்கம்

29th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

பெங்களூரில் அடுத்த ஆண்டு பிப். 13 ஆம் தேதி தொடங்கி, 5 நாட்களுக்கு பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது.

விமானத் தொழில் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிலை ஊக்குவிப்பதற்காக, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு விமானத் தொழில் கண்காட்சி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் போா் விமானங்கள், பயணிகள் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம். இதையொட்டி, கருத்தரங்கம் உள்ளிட்டவையும் நடக்கும்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப். 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14ஆவது பன்னாட்டு விமானத்தொழில் கண்காட்சியை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறையின் கீழுள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆா்.டி.ஓ) மேற்பாா்வையில் எச்.ஏ.எல். சாா்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் பல வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்கிறாா்கள். 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. பெங்களூரில் நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சியைக் காண கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சோ்ந்த பலரும் ஆா்வமாக உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT