பெங்களூரு

பெங்களூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

29th Nov 2022 02:32 AM

ADVERTISEMENT

பெங்களூரில் நவ.29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, அரண்மனை சாலையில் உள்ள மகாராணி தொகுப்புப் பல்கலைக்கழகத்தில் நவ.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. வேலைவாய்ப்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடி வருவோா் தன்விவரக் குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT