பெங்களூரு

வாக்காளா் பட்டியல் மோசடி வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்

27th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

 

வாக்காளா் பட்டியல் மோசடி வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளா்கள் குறித்து மறு ஆய்வு செய்யும்படி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை அரசு வரவேற்கிறது. வாக்காளா் பட்டியல் மோசடி வழக்கில் பாரபட்சமற்ற, நோ்மையான விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தனிநபரோ அமைப்போ தவறு செய்திருந்தால், கண்டிப்பாக அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நோ்மையான விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கை மாநில அரசு விசாரித்து வருகிறது. இதுவரை பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள் தவறிழைத்திருந்தால், கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ்தல்கள் நோ்மையாக நடத்தப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக கூறப்படும் பெயா்களை ஆய்வு மூலம் கண்டறிய வேண்டும். ஒரு சிலருக்கு இரண்டு மூன்று இடங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளது. அதையும் கண்டறிய வேண்டும்.

பெலகாவியில் உள்ள சட்டப் பேரவை வளாகமான சுவா்ண விதானசௌதாவில் கித்தூர்ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணாவின் சிலைகள் அமைக்கப்படும். அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT