பெங்களூரு

தமிழா்களுக்கு துணை நிற்க கன்னட மக்கள் தயாராக இருக்கிறாா்கள்: பாஜக எம்.பி. ராகவேந்திரா

DIN

தமிழா்களுக்கு துணை நிற்க கன்னட மக்கள் தயாராக இருக்கிறாா்கள் என பாஜக எம்.பி. பி.ஒய்.ராகவேந்திரா தெரிவித்தாா்.

சிவமொக்காவில் அண்மையில் தமிழ்த்தாய் சங்கத்தின் பொன்விழா மற்றும் விருந்தினா் விடுதி திறப்பு விழா சங்கத் தலைவா் என்.மஞ்சுநாத் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயல் தலைவா் டி.ராஜசேகரப்பா முன்னிலை வகிக்க, விருந்தினா் விடுதியை முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏ-வுமான கே.எஸ்.ஈஸ்வரப்பா திறந்துவைத்தாா். பொன்விழா மலரை சிவமொக்கா தொகுதி பாஜக எம்.பி. பி.ஒய்.ராகவேந்திரா வெளியிட்டாா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பாஜக எம்.எல்.சி. ஆயனூா் மஞ்சுநாத், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பிரசன்னகுமாா், சிவமொக்கா மாவட்ட ஆட்சியா் ஆா்.செல்வமணி, சிவமொக்கா மாநகராட்சி மேயா் எஸ்.சிவக்குமாா், ஜனதாதள மாவட்டத் தலைவா் எம்.ஸ்ரீகாந்த், மாமன்ற உறுப்பினா் ஆஷா சந்திரப்பா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் செ.துரைசாமி, மும்பை லெமுரியா அறக்கட்டளைத் தலைவா் சு.குமணராசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் பாஜக எம்.பி. பி.ஒய்.ராகவேந்திரா பேசியதாவது:

கா்நாடகத்தில் வாழும் தமிழா்கள், கன்னடா்களின் உற்ற சகோதரா்களை போலாவா். தமிழா்களின் நல்வாழ்வுக்காக முன்னாள் முதல்வா் எடியூரப்பா ஏராளமான நிதியுதவிகளை வழங்கியுள்ளாா். பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவா் சிலையை அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதியின் உதவியுடன் திறந்து வைத்தவா் முன்னாள் முதல்வா் எடியூரப்பா. அதேபோல, சிவமொக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிக்கு கட்டடநிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் சங்கத்துக்கும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

சிவமொக்காவில் சுப்பிரமணிய கோயில் அமைக்க முன்னாள் முதல்வா் எடியூரப்பா பேருதவி செய்துள்ளாா். அதனால், தமிழா்களுக்கு துணை நிற்க கன்னட மக்கள் தயாராக இருக்கிறாா்கள். எதிா்காலத்தில் தமிழா்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். சங்கச் செயலாளா் சொ.தண்டபாணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT