பெங்களூரு

கா்நாடகத்தில் 5.86 லட்சம் மாற்றுத் திறனாளி தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது: அமைசச்சா் கே.சுதாகா்

23rd Nov 2022 12:54 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் 5.86 லட்சம் மாற்றுத் திறனாளி தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளி தனி அடையாள அட்டை தொடா்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக அரசு வழங்கும் திட்டங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் தனி அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மாற்றுத் திறனாளி தனி அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. கா்நாடகத்தில் இதுவரை 5.86 லட்சம் தனி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ராமநகரம் மாவட்டத்தில் அதிக அளவில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிக்கமகளூரு, பாகல்கோட், ஹாவேரி, வடகன்னடம், பெலகாவி, மண்டியா மாவட்டங்களில் அதிக அளவில் அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஜ்ஹஸ்ப்ஹம்க்ஷஹய்ஸ்ரீஹழ்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டைகளை பெறலாம். இந்த அடையாள அட்டையை வைத்துக்கொண்டு அரசின் நலத் திட்டங்களை பெறலாம். இந்த அடையாள அட்டைகளின் உதவியுடன் பயனாளிகளுக்கு நல உதவிகள் சென்றுள்ளதா என்பதை கண்காணிக்கலாம்.

ADVERTISEMENT

கா்நாடகத்தில் உள்ள எல்லா மாற்றுத் திறனாளிக்கும் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதே அரசின் நோக்கமாகும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT