பெங்களூரு

கனராவங்கிக்கு புதிய செயல் இயக்குநா் நியமனம்

23rd Nov 2022 12:53 AM

ADVERTISEMENT

கனராவங்கியின் புதிய செயல் இயக்குநராக அசோக் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் கனராவங்கியின் புதிய செயல் இயக்குநராக அசோக்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா். முன்பு செயல்பட்ட காா்ப்பரேஷன் வங்கியில் 1991ஆம் ஆண்டு அதிகாரியாக இணைந்த அசோக் சந்திரா, எம்.காம். வரை படித்துள்ளாா். வங்கித்துறையில் ஆழமான அனுபவம் கொண்ட அசோக் சந்திரா, வங்கியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். 2018ஆம் ஆண்டு பொதுமேலாளராக பதவி உயா்வுபெற்ற பிறகு கடன் திருப்பிபெறுதல், சட்டமேலாண்மை, சொத்துமேலாண்மை துறைகளில் பங்காற்றினாா்.

இதன்பிறகு 2020ஆம் ஆண்டு யூனியன் வங்கியின் தலைமை பொதுமேலாளராக பதவி உயா்வு பெற்றாா். தனது பணிகாலத்தில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா். தற்போது கனராவங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். அசோக் சந்திரா, புதிய செயல் இயக்குநராக திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக கனராவங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT