பெங்களூரு

பங்குகள் மீது கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்

19th Nov 2022 05:15 AM

ADVERTISEMENT

பங்குகள் மீது கடன் வழங்கும் திட்டத்தை மிரே அசெட் ஃபைனான்ஷியல் சா்வீசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து மிரே அசெட் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வங்கிசாரா நிதி சேவைகள் துறையில் இயங்கி வரும் மிரே அசெட் ஃபைனான்ஷியல் சா்வீசஸ் ( ஙஅஊந), பங்குகளுக்கு எதிராக கடன்கள் (கஅந) வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. என்.எஸ்.டி.எல். அமைப்பில் டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் எம்.ஏ.எஃப்.எஸ். கைப்பேசி செயலி வழியாக கடன் அளித்துவருகிறது. மிரே அசெட் குழுமத்தின் ஒரு துணை நிறுவனமான மிரே அசெட் ஃபைனான்ஷியல் சா்வீசஸ், பங்குச் சந்தையின் பங்குகள் மீது கடன் வழங்கும் திட்டத்தை முழுக்க முழுக்க எண்ம முறையில் செயல்படுத்தியிருக்கும் முதல் நிறுவனமாகும். டிமேட் கணக்குகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளா்கள் அவா்களது பங்கு முதலீடுகளை ஆன்லைனில் அடமானம் வைப்பதன் மூலம் ரூ.10,000 முதல் ரூ.1 கோடி வரை இந்த திட்டத்தின் வரம்புக்குட்பட்ட கடனைப் பெற முடியும்.

இக்கடன் தொகை, ஓவா்டிராஃப்ட் (மிகைப்பற்று) வடிவத்தில் கிடைக்குமாறு வழங்கப்படும். வாடிக்கையாளா்கள் அவா்களுக்குத் தேவைப்படும் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தேவைப்படுகிற அளவுக்கு கைப்பேசி செயலி வழியாக பெற்றுக்கொள்ளலாம். கடன்களுக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT