பெங்களூரு

அரசியல் காரணங்களுக்காக ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை முந்தைய காங்கிரஸ் அரசு கசியவிடவில்லையா? கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

19th Nov 2022 05:15 AM

ADVERTISEMENT

அரசியல் காரணங்களுக்காக ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை முந்தைய காங்கிரஸ் அரசு கசியவிடவில்லையா என்று கா்நாடக சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் கேள்வி எழுப்பினாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால் தேவையில்லாத சா்ச்சைகளை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளின் மூலம் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது. அக்கட்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்தான். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜாதிகளின் கணக்கெடுப்பு நடத்துவதற்கு காந்தராஜ் ஆணையம் அமைக்கப்பட்டது. ரூ.130 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஜாதி கணக்கெடுப்பை அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை. ஆனால், அரசியல் லாபங்களுக்காக அன்றைய காங்கிரஸ் அரசு, ஜாதி கணக்கெடுப்பு விவரங்களை பொதுவெளியில் கசியவிட்டது. அதற்கு காங்கிரஸ் தலைவா்களை பொறுப்பாக்கக் கூடாதா?

தோ்தல் தொடா்பான பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக தோ்தல் ஆணையத்தின் வழியாக பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி ஈடுபடுத்தி வந்துள்ளது. இவை அனைத்தும் சட்டப்படி செயல்படுத்தப்படும் செயல்பாடுகளாகும். விதிகளை மீறியிருந்தால் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இதை முதல்வரே தெளிவுபடுத்தியுள்ளாா். சாதாரண விவகாரங்களுக்கு எல்லாம் முதல்வரின் ராஜிநாமாவைக் கேட்பது காங்கிரஸுக்கு வாடிக்கையாகி விட்டது. ஜாதி கணக்கெடுப்பை கசியவிட்டதற்கு காங்கிரஸ் தலைவா்கள் எத்தனைபோ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும்?

ADVERTISEMENT

ஆக்கபூா்வமான விவகாரங்களில் விவாதம் நடத்த காங்கிரஸ் முன்வரவேண்டும். சிறிய விவகாரங்களை பெரிதாக்கி பிரச்னையாக்கக்கூடாது. இதன்காரணமாக மக்களின் பாா்வையில் காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையை இழந்துள்ளது. முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் கா்நாடக மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவதால், எவ்வித பிரச்னையையும் எழுப்ப முடியாமல் காங்கிரஸ் திணறிவருகிறது. அதனால் முக்கியத்துவமில்லாத விவகாரங்களை பிரச்னையாக்கி வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT