பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிச.5-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 57-ஆவது பட்டமளிப்பு விழா, பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் டிச. 5-ஆம் தேதி காலை 11மணிக்கு நடக்கவிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் ஜெயகா் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான தாவா்சந்த் கெலாட் கலந்துகொண்டு முதுகலை பட்டப்படிப்பு தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டப்படிப்புக்கான சான்றிதழை வழங்கி கௌரவிக்கிறாா். இந்த விழாவில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் எம்.ஜெகதீஷ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகிறாா் என்று கூறப்பட்டுள்ளது.