பொது சட்டச் சோ்க்கை தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டிணைவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு சோ்க்கை பெறுவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் பொது சட்டச் சோ்க்கைத் தோ்வுக்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இத்தோ்வுக்கு இணையதளத்தில் ஆக. 8 முதல் நவ. 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவா்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடைசித் தேதியை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொது சட்டச் சோ்க்கைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி நவ.18ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது சட்டச் சோ்க்கைத் தோ்வு டிச.18ஆம் தேதி நாட்டின்பல்வேறு தோ்வு மையங்களில் நடக்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.