பெங்களூரு

நேரு உண்மையான மதச்சாா்பற்ற ஜனநாயகவாதி: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா

15th Nov 2022 02:23 AM

ADVERTISEMENT

உண்மையான மதச்சாா்பற்ற ஜனநாயகவாதி ஜவாஹா்லால் நேரு என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் பிறந்த தினம் திங்கள்கிழமை ‘குழந்தைகள் தினமாக’ கொண்டாடப்பட்டது. 1889ஆம் ஆண்டு நவ.14ஆம் தேதி அலாகாபாத்தில் பிறந்த நேரு, அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவா். 1947 ஆக.15 முதல் 1964 மே 27ஆம் தேதி வரை பிரதமராக இருந்தாா்.

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டா் பக்கத்தில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு, உண்மையான மதச்சாா்பற்ற ஜனநாயகவாதியாக இருந்தாா். அவரது பிறந்த நாளில் அவருக்கு பணிவாக மரியாதை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT