பெங்களூரு

எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா வெற்றிபெற மாட்டாா்: கா்நாடக அமைச்சா் கோவிந்த் காா்ஜோள்

15th Nov 2022 02:24 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா வெற்றிபெற மாட்டாா் என்று அந்த மாநில நீா்வளத்துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள் தெரிவித்தாா்.

இது குறித்துபெலகாவிரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காங்கிரஸ் கட்சி, ஒரு மூழ்கும் கப்பல். காங்கிரஸ் கட்சியில் நிலவும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா வெற்றிபெறமாட்டாா். கோலாா் தொகுதி அல்லது வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அதே நிலை தான். தோ்தலுக்கு தோ்தல் தொகுதி மாறுவது சித்தராமையாவுக்கு வாடிக்கையாகிவிட்டது.

நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் இல்லை. கட்சியை முன் நின்று வழிநடத்த யாரும் அக்கட்சியில் இல்லை. கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை தொடா்ந்து, முன்னணித் தலைவா்கள் பலரும் அக்கட்சியில் இருந்துவிலகி வருகிறாா்கள். காங்கிரஸ் கட்சியின் வலுவான தலைவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறாா். கா்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸில் இருந்து விலகினாா். கட்சியில் இருந்து விலக பலரும் காங்கிரசில் காத்திருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே நியமிக்கப்பட்டிருந்தால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதிப்புக்கூடி இருக்கும். காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கும்போது காா்கேவை காங்கிரஸ் தலைவராக நியமித்ததில் எந்த அா்த்தமும் இல்லை என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT