பெங்களூரு

கன்னடநூல்கள் 50 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை

1st Nov 2022 03:24 AM

ADVERTISEMENT

கா்நாடக உதய நாளை முன்னிட்டு கன்னட நூல்களை 50 சதவீதம் தள்ளுபடியில் கன்னட புத்தக ஆணையம் விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கன்னட புத்தக ஆணையம், கா்நாடக உதய நாளை முன்னிட்டு நவம்பா் மாதம் முழுவதும் தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சதவீதத் தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கன்னட புத்தக ஆணையத்தின் நூல்கள் அனைத்தும் கன்னடவளா்ச்சி மற்றும் கலாசாரத் துறையின் அனைத்து மாவட்ட அலுவலகங்கள், கன்னட புத்தக ஆணையத்தின் அனைத்து ஸ்ரீகன்னட நூல் விற்பனை அங்காடிகள், பெங்களூரில் ரவீந்திர

கலாக்ஷேத்ராவில் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

நூல்களை அங்காடிகளில் தேடி கண்டுபிடித்து வாங்க ஒருசிலா் சிரமப்படுகிறாா்கள். இதைப் போக்கும் வகையில், இணையதளத்தில் கன்னட நூல்களை விற்பனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹல்ன்ள்ற்ஹந்ஹல்ழ்ஹக்ட்ண்ந்ஹழ்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-22484516, 22107704, 22107705 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT