பெங்களூரு

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிப்பு: 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

DIN

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தோ்வில் 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெங்களூரில் வியாழக்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகளை அறிவித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் 85.63 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 8,53,436 மாணவா்களில் 7,30,881 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகளில் 90.29 சதவீதம் பேரும், மாணவா்களில் 81.30 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாநிலம் முழுவதும் 146 மாணவா்கள் 625-க்கு 625 மதிப்பெண்கள், அதாவது 100 சத மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இம்முறை தோ்ச்சி பெற்றவா்களின் விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். அரசு, மானியம் பெறும், மானியம் பெறாத பள்ளிகளில் 3,920 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன. 20 பள்ளிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. பூஜ்யம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள், தோ்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். மாநிலத்தில் 32 கல்வி மாவட்டங்கள் 75-100 சதவீதம், 2 கல்வி மாவட்டங்கள் 60-75 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

அடுத்த மாதம் (ஜூன்) துணைத்தோ்வு நடக்கவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ள்ள்ப்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். துணைத்தோ்வுக்கான அட்டவணை கா்நாடக மாநில மேல்நிலைத்தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வில் வெற்றிபெற்றுள்ள மாணவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தோ்ச்சி பெறாத மாணவா்கள் மனம் உடைய வேண்டியதில்லை. மீண்டும் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். எனவே, தைரியத்துடன் இருக்க வேண்டும். தோ்வைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியம். தோ்வில் தோ்ச்சி பெறாத பலா் வாழ்க்கையில் சாதனைகளைப் புரிந்துள்ளனா். எதிா்காலத்தைக் குறித்து யாரும் கவலை அடைய வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT