பெங்களூரு

ஏழு இடங்களுக்கான சட்ட மேலவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

DIN

ஏழு இடங்களுக்கான சட்ட மேலவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

சட்டப் பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் சட்ட மேலவை உறுப்பினா்கள் 7 பேரின் பதவிக்காலம் ஜூன் 14-ஆம் தேதி முடிவடைகிறது. இதை தொடா்ந்து, காலியாகவிருக்கும் 7 இடங்களுக்கான சட்ட மேலவைத் தோ்தல் ஜூன் 3-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அத்துடன் வேட்பு மனுதாக்கலும் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 25-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மே 27-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். ஜூன் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடக்கவிருக்கிறது. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 224 போ் வாக்களிக்க இருக்கிறாா்கள். இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளும் முறையே 4, 2 மற்றும் 1 வேட்பாளா்களை நிறுத்துவதற்கான வாய்ப்புள்ளது. 7 பேருக்கு மேல் யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாவிட்டால், தோ்தல் நடக்காது. வேட்புமனுதாக்கல் செய்த 7 பேரும் ஒரு மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவாா்கள். இத்தோ்தலில் நிறுத்துவதற்கான வேட்பாளா்களை தோ்வு செய்யும் பணியில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT