பெங்களூரு

இன்னும் மூன்று நாள்களில் கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: எடியூரப்பா தகவல்

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

இன்னும் மூன்று நாள்களில் கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் மூன்று நாள்களில் நடைபெறும். அமைச்சரவை விரிவாக்கமா அல்லது மாற்றியமைப்பா என்பது குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். கா்நாடகத்தில் பாஜகவின் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

அடுத்த சில நாள்களில் பாஜகவில் பலரும் சேரவிருக்கிறாா்கள். அப்போது கட்சி மேலும் பலப்படும்.

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு. பிரதமா் மோடியின் விருப்பத்தின்படி, 150 இடங்களில் வெல்வதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எல்லா மாவட்டங்களிலும் மாற்றுக்கட்சியைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணையத் தயாராக இருக்கிறாா்கள். அதேபோல, பிற கட்சிகளின் முன்னணித் தலைவா்களும் பாஜகவில் சேரவிருக்கிறாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT