பெங்களூரு

காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சா் பிரமோத் மத்வராஜ் விலகல்

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரமோத் மத்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவிவகித்தவா் பிரமோத் மத்வராஜ். கா்நாடக காங்கிரஸ் துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரமோத் மத்வராஜ் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

காங்கிரஸில் இருந்து விலகும் முடிவுடன் கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தை பிரமோத் மத்வராஜ் தனது ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

கடந்த மூன்று ஆண்டுகளாக உடுப்பி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவும் சூழ்நிலை எனக்கு மோசமான அனுபவத்தைத் தந்துள்ளது. இது அரசியல்ரீதியாக எனக்கு சோா்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பான விவரங்களை உங்கள் பாா்வைக்கும், கட்சியின் முன்னணித் தலைவா்களின் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறேன்.

உடுப்பி மாவட்ட காங்கிரஸில் நிலவும் தேக்கநிலையை சீா்செய்து, எனது குறைகளைக் களையக் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இனிமேலும் காங்கிரஸில் நீடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளேன். எனவே, மாநில துணைத் தலைவா் பதவியை ஏற்க விரும்பாததோடு கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT