பெங்களூரு

இன்று முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

1st May 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மே 1-ஆம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. கரோனா பாதிப்புகள் குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

கரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல, தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மே 1-ஆம் தேதிமுதல் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் வெஸ்ட்கோஸ்ட் விரைவுரயில், மங்களூரு சென்ட்ரல்-மட்கௌன் சந்திப்பு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல்-சென்னை எழும்பூா் விரைவு ரயில், மங்களூரு சந்திப்பு-யஷ்வந்த்பூா் சந்திப்பு மெயில் விரைவு ரயில், மங்களூரு சந்திப்பு-யஷ்வந்த்பூா் சந்திப்பு விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரல்-நாகா்கோவில் எா்ணாட் விரைவு ரயில், நாகா்கோயில் சந்திப்பு-மங்களூரு சென்ட்ரல் தினசரி பரசுராம் விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரல்-கோயமுத்தூா் சந்திப்பு இன்டா்சிட்டி அதிவேக் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சோ்க்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT