பெங்களூரு

15 ஆயிரம் பட்டதாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் பணியிடங்கள்: இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

15 ஆயிரம் பட்டதாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியா்களை நியமிக்க திட்டமிட்டுள்ள கா்நாடக அரசு, அதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்து கா்நாடக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளில் பணியாற்ற 15 ஆயிரம் பட்டதாரி ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதில் கல்யாண கா்நாடகப் பகுதியைச் சோ்ந்த 5,000 ஆசிரியா்களும் அடக்கம்.

இப்பணியிடங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்க மே 21, 22-ஆம் தேதிகளில் போட்டித்தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வை எழுத விரும்பும் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை மாா்ச் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்படும். அதன்பிறகு, மாா்ச் 23 முதல் ஏப். 22ஆம் தேதிவரையில் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ா்ப்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ட்ற்ம்ப்/ஞ்ல்ற்ழ்ழ்ங்ஸ்ரீற்2019.ட்ற்ம்ப் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆங்கில மொழிப்பாடம், கணிதம், அறிவியல், உயிரி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வு நடத்தப்படும். 400 மதிப்பெண்களுக்கு நடக்கும் தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே தோ்ச்சி பெற முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT