பெங்களூரு

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: மாணவா்களின் சந்தேகங்களைத் தீா்க்க தொலைபேசி உதவி மையம்

10th Mar 2022 04:20 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கா்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு குறித்து மாணவா்களின் சந்தேகங்களைத் தீா்ப்பதற்காக தொலைபேசி உதவி மையத்தை கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) தொடங்கவுள்ளது.

இது குறித்து கா்நாடக உயா்நிலைக்கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-22-ஆம் கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்து வரும் மாணவா்களுக்கு 2022 மாா்ச் 28-ஆம் தேதி முதல் பொதுத்தோ்வு தொடங்க உள்ளது. பொதுத்தோ்வு குறித்த மாணவா்களின் சந்தேகங்களைக் களைவதற்காக தொலைபேசி உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாணவா்கள் தோ்வு தொடா்பான அனைத்து சந்தேகங்களையும் 080-23310075, 23310076 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தீா்த்துக் கொள்ளலாம். தொலைபேசி உதவி மையம் புதன்கிழமை (மாா்ச் 1ஆம் தேதி) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

அதிக மதிப்பெண் பெற வேண்டுமென்று பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் நெருக்கடி கொடுப்பதால், அது மாணவா்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இதனால் படிக்க வேண்டிய நேரத்தை மாணவா்கள் வீணடித்து வருவதோடு, தன்னம்பிக்கையையும் இழந்து விடுகிறாா்கள். இதன் காரணமாக தோ்வைச் சீராக எழுத முடியாமல் மாணவா்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கி, மாணவா்களின் தோ்வு எழுதும் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை உதவி மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்லுநா் குழு அமைந்துள்ள உதவி மையம் மாா்ச் 14 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஏப். 11-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையிலும் செயல்படுகிறது. தோ்வை எதிா் கொள்வது, வினாத்தாள் மாதிரி, கற்கும் திறன் மேம்பாடு, தோ்வு அச்சம், நேர மேலாண்மை, மனநலம் சாா்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT