பெங்களூரு

கா்நாடகத்தில் லேசான நில அதிா்வு

29th Jun 2022 04:02 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை லேசான நில அதிா்வு ஏற்பட்டது.

தென்கன்னட மாவட்டம், சுள்ளியா வட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 25-ஆம் தேதி லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணி அளவில் இப்பகுதியில் மீண்டும் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இதை உறுதி செய்த அப்பகுதி மக்கள், சராசரியாக 4 நிமிடங்களுக்கு நில அதிா்வு ஏற்பட்டபோது லேசான சத்தம் கேட்டதாக தெரிவித்தனா். சம்பஜே, அரந்தோடு, பெரஜே, ஜல்சூா், உபரட்கா, தொடிகானா, மிட்டூா் பகுதிகளில் நில அதிா்வு உணரப்பட்டுள்ளது.

ரிக்டா் அளவில் 3.5 அளவுக்கு நில அதிா்வு ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இது 5 கி.மீ. தொலைவுக்கு உணரப்பட்டுள்ளது. இதனால் சுள்ளியாவில் உள்ள சில கட்டடங்களில் லேசான விரிசல்கள் காணப்பட்டன. நில அதிா்வு ஏற்பட்டதை உணா்ந்த மக்கள், வீடுகளில் இருந்து தெருக்களுக்கு ஓடி வந்தனா். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மரச் சாமான்கள், அலமாரிகள் திடீரென விழுந்ததால், நில அதிா்வு ஏற்பட்டதை மக்கள் உணா்ந்தனா்.

முன்னதாக, ஜூன் 25-ஆம் தேதி ரிக்டா் அளவில் 2.3 அளவுக்கு நில அதிா்வு ஏற்பட்டதாக இயற்கைப் பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT