பெங்களூரு

. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விவகாரத்தில் நல்ல தீா்வு கிடைக்கும்: பசவராஜ் பொம்மை

28th Jun 2022 03:53 AM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விவகாரத்தில் நல்ல தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சிலின் 47-ஆவது கூட்டம் சண்டிகரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே நடந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை குறித்துவிவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை தொடா்பாக இறுதி முடிவெடுக்க வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில்தான். இந்நிலையில், சண்டிகரில் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை குறித்த விவகாரத்தில் நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT