பெங்களூரு

பெங்களூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

28th Jun 2022 03:55 AM

ADVERTISEMENT

பெங்களூரில் ஜூன் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புமுகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் ஸ்ரீஜெகத்குரு ரேணுகாச்சாா்யா கல்லூரி, மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்பில் பெங்களுரு, ரேஸ் கோா்ஸ் சாலை, ஸ்ரீ ஜெகத்குரு ரேணுகாச்சாா்யா கல்லூரி வளாகத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

வேலைவாய்ப்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

வேலை தேடி வருவோா் தன் விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT