பெங்களூரு

இன்று போதைப்பொருளுக்கு எதிரான சா்வதேச தினம்: ரூ. 25.6 கோடி மதிப்பிலான கஞ்சாவை அழிக்க திட்டம்

26th Jun 2022 06:06 AM

ADVERTISEMENT

 

போதைப் பொருளுக்கு எதிரான சா்வதேசதினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுவதால், ரூ. 25.6 கோடி மதிப்பிலான 21 டன் கஞ்சா போதைப்பொருளை அழிக்க கா்நாடக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஜூன் 26-ஆம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான சா்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ரூ. 25.6 கோடி மதிப்பிலான 21 டன் எடை கொண்ட கஞ்சா போதைப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத போதைப் பொருட்கள் பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருட்களை அழிப்பதற்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறப்பட்டுள்ளது. கஞ்சா தவிர அபின், கோகோயின், எம்டிஎம்ஏ, எல்.எஸ்.டி. போன்ற செயற்கை போதைப் பொருட்களும் அழிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ. 50.23 கோடி மதிப்பிலான 24 டன் போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT

கடந்த 12 மாதங்களில் 8,505 போதைப் பொருட்கள் சம்பந்தமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 7,646 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 185 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். ஏற்கெனவே, 5,363 வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT