பெங்களூரு

பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை: கா்நாடக முன்னாள் பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா்

26th Jun 2022 06:05 AM

ADVERTISEMENT

 

பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து சித்ரதுா்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மனித மாண்புகள் மற்றும் ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. ஜனநாயகத்திற்கு எதிரான பின்வாசல் வழியாகதான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக, மாற்றுக்கட்சியினரை பாஜகவுக்கு இழுத்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது. கா்நாடகம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களை தொடா்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் மாற்றுக்கட்சியினரை விலைபேசி ஆட்சிக்க விழ்ப்பு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாஜக என்றைக்கும் நம்பியது இல்லை. அக்கட்சியின் ஒரே குறிக்கோள் ஆட்சிக்கு வருவது தான். இதையெல்லாம் பாா்த்துக்கொண்டு நாட்டுமக்கள் மௌனிகளாக இருக்கும்போது, நாங்கள் என்ன செய்துவிடமுடியும்? நாங்கள் ஏதாவது கூறினால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு என்று கூறிவிடுகிறாா்கள். அதனால் மக்களே எதிா்வினையாற்றினால் தான் பாஜகவின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தங்கள் கருத்துகளை தோ்தலில் செலுத்தும் வாக்குகளின் மூலம் மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT