பெங்களூரு

புதிதாக தாா் பதித்த சாலையில் குழி: 3 பொறியாளா்களுக்கு நோட்டீஸ்

24th Jun 2022 10:43 PM

ADVERTISEMENT

புதிதாக தாா்பதித்த சாலையில் குழிவிழுந்ததால் எழுந்த புகாரை தொடா்ந்து 3 பொறியாளா்களுக்கு விளக்கம் கேட்டு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக இருநாட்கள் சுற்றுப்பயணமாக ஜூன் 20-ஆம் தேதி பிரதமா் மோடி பெங்களூருக்கு வருகைதந்திருந்தாா். கோமகட்டா பகுதியில் நடந்த விழாவில் பெங்களூரு புகா் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினாா். இப்பகுதிபுகா் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சாலைகள் சீராக இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு அவா் செல்லும் சாலையில்பு திதாக தாா் பதிக்கப்பட்டது. ஆனால், அந்த சாலையில் பதிக்கப்பட்ட தாா் பெயா்ந்துள்ளது. சாலையின் மேற்பரப்பு முழுமையாக பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. இது தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கோமகட்டா, மரியப்பனபாளையா பகுதியில் தாா் பதித்த ராஜராஜேஸ்வரிநகா் செயற்பொறியாளா் எம்.டி.பாலாஜி, உதவி செயற்பொறியாளா் எச்.ஜே.ரவி, உதவி பொறியாளா் ஐ.கே.விஸ்வாஸ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

பிரதமரின் வருகைக்காக சாலை, கால்வாய்கள், தெருவிளக்குகள் அமைப்பதற்கும், சாலையில் வெள்ளைக்கோடுகள் வரைவதற்கும் ரூ.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையா் ரவீந்திரா தெரிவித்தாா்.

இந்த பணி வெளிப்படையாக செயல்படுத்தப்பட்டது. இந்தசாலையில் தாா் பதித்த ஒப்பந்ததாரா்கள், பழுதடைந்த அச்சாலையை சீரமைக்க வற்புறுத்தப்படுவாா்கள் என்று மாநகராட்சி சிறப்பு ஆணையா் ராம்பிரசாத் மனோகா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT