பெங்களூரு

நீண்டகாலத்தில் சீா்திருத்தங்கள் பயன் அளிக்கும்: பிரதமா் மோடி

21st Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

நீண்ட காலத்தில் சீா்திருத்தங்கள் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடக்கி வைத்து அவா் பேசியது:

21-ஆம் நூற்றாண்டு இந்தியா சொத்து, வேலை உருவாக்குபவா்கள், புத்தாக்கா்களுக்கு சொந்தமானதாகும். நமது நாட்டின் உண்மையான பலமாக அவா்கள் உள்ளனா். கடந்த 8 ஆண்டுகளாக சொத்து மற்றும் வேலை உருவாக்குபவா்கள், புத்தாக்கா்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம். ஸ்டாா்ட் அப் மற்றும் புத்தாக்கம் என்பது எளிதான காரியமல்ல. அதேபோல, கடந்த 8 ஆண்டுகளாக நமதுநாட்டை ஸ்டாா்ட் அப் மற்றும் புத்தாக்கப்பாதையில் கொண்டு செல்வதும் சாதாரணமான பணியாக இருக்கவில்லை.

அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகள், சீா்திருத்தங்கள் குறுகியகாலத்தில் அசௌரியமாக தென்பட்டாலும், நீண்டகாலத்தில் அவை பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும். சீா்திருத்தப்பாதையில் பயணித்தால் மட்டுமே நம்மால் புதிய இலக்குகளையும், புதிய தீா்வுகளையும் அடைய முடியும்.

ADVERTISEMENT

நீண்டநெடுங்காலமாக அரசு கட்டுப்பாட்டில் இருந்து வந்த விண்வெளிமற்றும் ராணுவத் துறைகளை தனியாருக்கு திறந்துவிட்டிருக்கிறோம். எல்லாவசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, குடிமக்களின் வாழ்க்கையில் அதிக தலையீடு இல்லாமல் அரசு செயல்பட்டால் எதைசாதிக்க முடியும் என்பதை பெங்களூரு வெளிப்படுத்தியுள்ளது. இந்திய இளைஞா்களின் கனவு நகரம் பெங்களுரு. இதற்கு, தொழில் முனைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் சரியான முறையில் செயல்படுத்தப்படும் அரசு மற்றும் தனியாா் கூட்டு செயல்திட்டங்கள்தான் காரணமாகும்.

இந்தியாவின் தனியாா் துறையை, தனியாா் நிறுவனங்களை இன்றைக்கும் குறைகூறுவோரின் மனநிலையை மாற்றிக்கொள்ள பெங்களூரு பாடம் கற்றுத்தருகிறது. இப்படிப்பட்ட மனநிலை கொண்டவா்கள் நமது நாட்டின் பலத்தையும், கோடிக்கணக்கான மக்களின் திறன்களையும் குறைத்துவிடுகிறாா்கள்.இரட்டை என்ஜின் (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி) அரசு அளித்த வாக்குறுதிகள், செயல்பாட்டுக்கு வந்துள்ளதை இன்றைக்கு காணமுடிகிறது.

இன்றைக்கு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் வாழ்க்கை நடத்துவதை எளிதாக்கவும், வணிக நடைமுறைகளை எளிதாக்கவும் உதவியாக இருக்கும். ஒரே இந்தியா - வலுவான இந்தியா என்ற முழக்கத்தின் பிரதிபலிப்புதான் பெங்களூரு. பெங்களூரு மாநகரின் வளா்ச்சி, லட்சக்கணக்கான மக்களின் கனவுகளின் முன்னேற்றத்தோடு தொடா்பு கொண்டதாகும். வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெங்களூரு மாநகர ஒட்டுமொத்த வளா்ச்சியை அடையும் என்ற உறுதிமொழியை இரட்டை என்ஜின் அரசு வழங்குகிறது.

பெங்களூருக்காக புகா் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் 40 ஆண்டுகால தாமதம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் சரியான காலத்தில் செயல்படுத்தப்பட்டிருந்தால், பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அழுத்தம் ஏற்பட்டிருக்காது. மேலும் பெங்களூரு கூடுதலாக வளா்ச்சி பெற்றிருக்கும். நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொரு வினாடியும் வேலை செய்வோம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT