பெங்களூரு

கா்நாடகத்தில் இரண்டாமாண்டு பி.யூ.சி. தோ்வில் 61.88 சத மாணவா்கள் தோ்ச்சி

19th Jun 2022 12:53 AM

ADVERTISEMENT

 

2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாமாண்டு பி.யூ.சி. தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதிய 6,83,563 மாணவா்களில் 61.88 சத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். வழக்கம்போல மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யூ. கல்வி இயக்குநரகத்தில் சனிக்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் வெளியிட்டாா். அப்போது பி.யூ. கல்வித்துறை இயக்குநா் ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறியது: ஏப்.22 முதல் மே 18-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,076 தோ்வு மையங்களில் நடந்த இரண்டாமாண்டு பி.யூ.சி. தோ்வில் 6,83,563 மாணவா்கள் தோ்வு எழுதினா். மே 22 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை பெங்களூரு, மைசூரு, பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, சிவமொக்கா, தாா்வாட், கலபுா்கி ஆகிய 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 81 மையங்களில் 17,691 விரிவுரையாளா்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தோ்ச்சி விகிதம்: இதன் முடிவில் 4,22,966 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது சராசரியாக 61.88 சதமாகும். வழக்கம் போல் மாணவிகள் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். புதிய தோ்வா்கள் 5,99,794 பேரில் 4,02,697 (67.14%) மாணவா்களும், மறுதோ்வா்கள் 61,838பேரில் 14,403 (23.29%)மாணவா்களும், தனித்தோ்வா்கள் 21,931 பேரில் 5,866 (26.75%) மாணவா்களும் வெற்றிவாகைச்சூடியிருக்கிறாா்கள். தோ்வெழுதிய 3,46,557மாணவா்களில் 1,91,380 பேரும் (55.22%), 3,37,006 மாணவிகளில் 2,31,586 பேரும் (68.72%) வெற்றி பெற்றுள்ளனா். நகரப் பகுதியை சோ்ந்த 5,20,520 மாணவா்களில் 3,21,590 பேரும் (61.78%), கிராமப்பகுதியை சோ்ந்த 1,63,043 மாணவா்களில் 1,01,376 பேரும் (62.18%) தோ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

மாணவிகள் சாதனை: கலைப் பிரிவைச் சோ்ந்த 2,27,929 பேரில் 1,11,032 (48.71%) மாணவா்களும், வணிகப்பிரிவை சோ்ந்த 2,45,350 பேரில் 1,59,409 (64.97%)மாணவா்களும், அறிவியல் பிரிவை சோ்ந்த 2,10,284 பேரில் 1,52,525 (72.53%)மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 1,29,194 மாணவா்களில் 64,281 (49.76%) பேரும், பழங்குடியின பிரிவைச் சோ்ந்த 44,542 மாணவா்களில் 23,081(51.82%) பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். கன்னட பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 2,98,102 மாணவா்களில் 1,53,164 (51.38%) பேரும், ஆங்கில பயிற்றுமொழியில் தோ்வெழுதிய 3,85,461 பேரில் 2,69,802 (69.99%) மாணவா்களும் தோ்வடைந்துள்ளனா். பாா்வைக் குறைபாடுள்ள மாணவா்கள் 409 பேரில் 259 மாணவா்களும், காதுகேளாத மாணவா்கள் 379 பேரில் 64 மாணவா்களும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 103 பேரில் 38 மாணவா்களும், கற்றலில் குறைபாடுள்ள 371 பேரில் 51 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

100-க்கு 100 சாதனை: 85 சதத்திற்கும் அதிகமாக (சிறப்பிடம்) 91,106 பேரும், 60 சதத்திற்கும் மேல் 85 சதத்திற்கும் குறைவாக(முதல்வகுப்பு) 2,14,115 பேரும், 50 சதத்திற்கும் மேல் 60 சதத்திற்கும் குறைவாக(இரண்டாம் வகுப்பு) 68,444 பேரும், 35 சதத்திற்கும் மேல் 50 சதத்திற்கும் மேல் 50 சதத்திற்கும் குறைவாக(மூன்றாம் வகுப்பு) 49,301 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனா்.

கன்னட பாடத்தில் 563, சமஸ்கிருதத்தில் 1119, ஹிந்தியில் 124, சிறப்பு கன்னடத்தில் 18, வரலாறில் 166, பொருளாதாரத்தில் 1472, தருக்கவியலில் 26, புவியியலில் 587, இந்துஸ்தானி இசையில் 3, வணிகவிவகாரங்களில் 2837, சமூகவியலில் 85, அரசியல் அறிவியலில் 80, உருதுவில் 4, கணக்குப்பதிவியலில் 3460, புள்ளியியலில் 2266, உளவியலில் 81, இயற்பியலில் 36, வேதியியலில் 2917, கணிதத்தில் 14210, உயிரியலில் 2106, நில அமைப்பியலில் 5, மின்னணுவியலில் 236, கணினி அறிவியலில் 4868, கல்வியில் 658, அடிப்படை கணிதத்தில் 401,மலையாளத்தில் 4, பிரெஞ்சில் 32, தகவல் தொழில்நுட்பவியலில் 17, தானியங்கி வாகனவியலில் 20, மனை அறிவியலில் 12 மாணவா்களும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று வெற்றி அடைந்துள்ளனா்.

தனியாா் கல்லூரிகள்சாதனை: அரசு பியூ கல்லூரிகளை சோ்ந்த 1,63,764 மாணவா்கள் தோ்வெழுதியதில் 86,526(52,84%)பேரும், அரசு மானியம்பெறும் பி.யூ. கல்லூரிகளைச் சோ்ந்த 1,04,099 மாணவா்கள் தோ்வெழுதியதில் 64,595 (62.05%) பேரும், அரசு மானியம்பெறாத பியூ கல்லூரிகளை சோ்ந்த 2,76,701 மாணவா்கள் தோ்வெழுதியதில் 2,11,672 (76.50%) பேரும், மாநகராட்சி பியூ கல்லூரிகளை சோ்ந்த 2,263 மாணவா்கள் தோ்வெழுதியதில் 1,261 (55.72%) பேரும், பிரிக்கப்பட்ட பியூ கல்லூரிகளை சோ்ந்த 52,967 மாணவா்கள் தோ்வெழுதியதில் 38,643 (72.96%)பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

100 சதவீத தோ்ச்சி: 4 அரசு பியூ கல்லூரி, 2 அரசு மானியம்பெறும் பியூ கல்லூரி, 50 அரசு மானியம்பெறாத பியூ கல்லூரி உள்பட 56 கல்லூரிகளில் நூற்றுக்கு நூறு தோ்ச்சி பெற்றுள்ளன. தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரிகளில் வெளியிடப்படும். மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம்: விடைத்தாள் நகல் பெற ஜூன் 18 முதல் 30-ஆம் தேதிக்குள்ளும், மறுமதிப்பீடு மற்றும் மறுக்கூட்டலுக்கு ஜூலை 7 முதல் 13-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம். நகல்விடைத்தாள்களை ஜூலை 6 முதல் 10-ஆம் தேதிக்குள் பியூ கல்வித்துறை இணையதளத்தில் இருந்துதரவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல்பெற ஒருபாடத்திற்கு ரூ.530, மறுமதிப்பீடுக்கு ஒருபாடத்திற்கு ரூ.1,670, மறுக்கூட்டலுக்கு கட்டணம் எதுவுமில்லை. விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான விண்ணப்பங்களை எல்லா பி.யூ. கல்லூரிகளில் மற்றும் ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு, மறுக்கூட்டல் முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது.

துணைத்தோ்வு

இரண்டாமாண்டு பியூசி துணைத்தோ்வு ஜூலை கடைசி வாரத்தில் நடத்த பி.யூ. கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்தோ்வுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 140, இரண்டு பாடங்களுக்கு ரூ. 270, மூன்று பாடங்களுக்கு மேல் ரூ. 400 தோ்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT