பெங்களூரு

இலவச ஐஏஎஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

19th Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

 

பெங்களூரில் அளிக்கப்படும் இலவச ஐஏஎஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா சாா்பில் பெங்களூரில் நேரடியாக இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), கா்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.) தோ்வுக்கான பயிற்சியை இரண்டரை ஆண்டுகாலமாக இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்த பயிற்சி வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதிமுதல் தொடங்கவிருக்கின்றன. பெங்களூரில் தங்கிப்படிக்க விடுதி வசதியும் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஹழ்ஹ்ஹஸ்ஹ்ள்ஹ்ஹம்ஹட்ஹள்ஹக்ஷட்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் அல்லது 8073499217 என்ற செல்லிடப்பேசியில் வாட்ஸ் ஆப் வழியாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு கா்நாடக ஆா்ய வைஸ்ய மகாசபா, 16, சேஷாத்ரி சாலை, காந்திநகா், பெங்களூரு-9 என்ற முகவரி அல்லது 080-22206151, 9663900439 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT