பெங்களூரு

குடியரசுத் தலைவா் பெங்களூரு வருகை

14th Jun 2022 02:11 AM

ADVERTISEMENT

இரண்டு நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பெங்களூருக்கு வருகை தந்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக திங்கள்கிழமை பெங்களூருக்கு வருகை தந்தாா். தில்லியில் இருந்து தனிவிமானத்தில் பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, அரசு தலைமைச்செயலாளா் வந்திதா சா்மா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதை தொடா்ந்து, பெங்களூரில் உள்ள தேசிய ராணுவப் பள்ளியின் பவள விழாவை ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தாா். 1946-ஆம் ஆண்டு ஆக.1-ஆம் தேதி அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளா் ஆறாம் ஜாா்ஜ் மன்னரால் இப்பள்ளி ‘ராயல் இந்தியன் மிலிட்டரி ஸ்கூல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டதாகும்.

இதனிடையே, திங்கள்கிழமை இரவு ஆளுநா் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை கனகபுரா சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இஸ்கான் ஸ்ரீ ராஜாஜிராஜா கோவிந்தா கோயிலைத் திறந்துவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, தனது இரு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவா் தில்லி திரும்புகிறாா். குடியரசுத் தலைவரின் வருகையைத் தொடா்ந்து ஆளுநா் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT