பெங்களூரு

ஜே.பி.நகா் - மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையம் இடையே பேருந்து சேவை

9th Jun 2022 02:51 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரு, ஜே.பி.நகா் 3-ஆவது பேஸ் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் தனது வாடிக்கையாளா்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக செயல்பட்டு வந்துள்ளது. பெங்களூரு, ஜே.பி.நகா் 3-ஆவது பேஸ் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை புதிய பேருந்து சேவை ஜூன் 9-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இரு மாா்க்கங்களிலும் டெல்மியா சதுக்கம், ஜே.பி.நகா் 6-ஆவது பேஸ், கதிரேனஹள்ளி குறுக்குசாலை, கத்ரிகுப்பே, பி.இ.எஸ். கல்லூரி நிறுத்தங்களின் வழியாக நாளொன்றுக்கு 36 நடைகள் இயக்கப்படுகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT