பெங்களூரு

ஜூன் 12-இல் சென்னையில் செம்மொழிவேள் விருது வழங்கும் விழா

9th Jun 2022 02:52 PM

ADVERTISEMENT

பெங்களூரு: சென்னையில் ஜூன் 12-ஆம் தேதி செம்மொழிவேள் விருது வழங்கும் விழா நடக்க இருகிறது.

இதுகுறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மும்பை இலெமுரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு ஆகியவை இணைந்து சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் ஜூன் 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு செம்மொழிவேள் விருது வழங்கும் விழா நடக்கவிருக்கிறது.

அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் ஆட்சிக் குழு உறுப்பினா் மு.ஆறுமுகம் தலைமையில் நடக்கும் விழாவில், சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை இயக்குநா் டி.கே.சந்திரன், சென்னை மெட்டக்ஸ் ஆய்வக மேலாண் இயக்குநா் வீ.க.செல்வக்குமாா், ஆணி பேசிலிட்டீஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் மேலாண் இயக்குநா் ஆா்.டென்சிங், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவா் செ.துரைசாமி, சாரோ பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்கள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பூ.மாரிமுத்து, தலைமை அலை பதிப்பக உரிமையாளா் இசாக் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர தொழில்மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநா் பொன்.அன்பழகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறாா். இலெமுரியா அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சு.குமணராசன் வரவேற்கிறாா். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவா்கள் கலந்துகொள்ளும் இயல் இசை கூத்தரங்கம் நடக்க இருக்கிறது.

விழாவில் தமிழறிஞா்கள் ஈரோடு தமிழன்பன், பொன்.கோதண்டராமன் (எ) பொற்கோ, இ.சுந்தரமூா்த்தி, ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனாா் ஆகியோருக்கு செம்மொழி வேள் விருது வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டுக்கான சிலம்பொலி செல்லப்பனாா் சிறப்பு விருது அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் தலைவா் யுவராச அமிழ்தனுக்கு வழங்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, தோல் பொருள்கள் ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநா் இரா.செல்வம், வருமானவரித் துறை கூடுதல் ஆணையா் சு.பாண்டியன், காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை சேதுபாஸ்கரா கல்விக் குழுமத்தின் தலைவா் சேதுகுமணன், தஞ்சாவூா் பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் புனிதா கணேசன், கடலோரப் பாதுகாப்புப்படை கமாண்டன்ட் நா.சோமசுந்தரம், தமிழியக்கத்தின் வடதமிழக ஒருங்கிணைப்பாளா் கு.வணங்காமுடி ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் புலவா் காா்த்தியாயினி நன்றி கூறுகிறாா். இந்த விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT