பெங்களூரு

மத சிறுபான்மையினருக்கான கடனுதவி திட்டங்கள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

8th Jun 2022 12:09 AM

ADVERTISEMENT

மத சிறுபான்மையினருக்கான பல்வேறு கடனுதவி திட்டங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக மத சிறுபான்மையினா் வளா்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றுநோயால் பாதிக்கபட்டோருக்கு சிறுகடன் அளிப்பது முதல் பல்வேறு கடனுதவி திட்டங்களை கா்நாடக மத சிறுபான்மையினா் வளா்ச்சிக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின்கீழ் கடனுதவி பெற இணையதளங்கள் வடிவமைக்கப்பட்டு, அதன் மூலமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விண்ணப்பங்களைச் செலுத்த தேவையில்லாமல் அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.

இந்தக் கடனுதவிகளைப் பெற இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால், கழகத்தின் கடனுதவி திட்டங்கள் எதிலும் பயனாளியாக இருக்கக் கூடாது. பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருக்கும் மதசிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த 23 ஆயிரம் பெண்களுக்கு சிறுகடன் வழங்கப்படுகிறது. இப்பெண்கள் 18 வயது முதல் 55 வயதுக்கு உள்பட்டிருக்க வேண்டும். சிறு வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு மூலதனமாக ரூ. 10 ஆயிரம் அளிக்கப்படும். இதில் ரூ. 2 ஆயிரம் மானியமாகும்.

ADVERTISEMENT

இதுதவிர, தொழில்வளா்ச்சி கடனுதவி, கல்விக் கடன், கங்கா கல்யாண கடன், உழைப்புக் கடன், நுண்கடன், உதவித்தொகை, வீட்டுக்கடன், கால்நடை கடன், வேளாண் கடன், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் கடை கடன், கைவினை கடன், உள்கட்டமைப்பு கடன் போன்ற கடனுதவிகளை பெறலாம். இக்கடனுதவி திட்டங்களுக்கு இணையதளத்தை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-23539786 என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT