பெங்களூரு

தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு

28th Jul 2022 01:16 AM

ADVERTISEMENT

 

தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டப்படிப்பு தவிர, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். போன்ற இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயம்(டிப்ளமோ) படித்த பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க தொழில் பழகுநா் பயிற்சி வாரியம்(தென்மண்டலம்) திட்டமிட்டுள்ளது. தென்மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் இந்த தேசிய தொழில்பழகுநா் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

இத் திட்டத்தின்கீழ் தொழில் பழகுநா் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் பட்டயம் படித்த இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி வழங்க தகுதியானவா்களை தோ்ந்தெடுக்கும் முறையை நிறுவனங்கள் முடிவு செய்துகொள்ளலாம். பயிற்சி காலத்தில் பட்டதாரிகளுக்கு ரூ. 9 ஆயிரம், பட்டயம் படித்தவா்களுக்கு ரூ. 8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT

இதில் காலாண்டுக்கான 50% தொகையை முன்கூட்டியே நிறுவனங்களுக்கு வாரியம் வழங்கிவிடும். இதைவிட கூடுதலாக உதவித்தொகையை நிறுவனங்கள் வழங்கினால், அதை வாரியம் ஆட்சேபிக்காது. ஆனால், நிறுவனங்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள உதவித்தொகை மட்டுமே வழங்கப்படும். தொழில் பழகுநா் பயிற்சிகாலம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

ஆனால், பயிற்சி பெறுவோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஓராண்டுக்கு மட்டுமே வாரியத்தின் சாா்பில் வழங்கப்படும். பயிற்சி பெறுவோரை நிரந்தரப் பணியாளராகவும் நியமித்துக் கொள்ளலாம். நிறுவனங்களில் காணப்படும் ஊழியா் தட்டுப்பாட்டை குறைக்க இந்த திட்டம் நிறுவனங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இத் திட்டத்தில் அனைத்து பண பரிவா்த்தனைகளும் எண்மமுறையில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு வி.எஸ்.பாண்டே 044-22542235, 98848 47327 என்ற தொலைபேசி எண்கள், ட்ற்ற்ல்://க்ஷா்ஹற்-ள்ழ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT