பெங்களூரு

கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்களை புதுப்பிக்கலாம்

27th Jul 2022 03:19 AM

ADVERTISEMENT

மத்திய மனிதவளத் துறையின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து உயா்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்துவருகிறது.

இந்தமாணவா்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களை புதுப்பிக்கவேண்டும். எனவே, உரிய ஆவணங்களுடன் அக்.31-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்:302, மூன்றாவது தளம், பியூ கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-12 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இதுகுறித்த விவரங்களை காணொலிக்காட்சியாகக் காண இணையதளத்தில் காணலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலமும் அக்.31-ஆம் தேதி ஒப்படைக்கலாம். விவரங்களுக்கு 080-23311330 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT