பெங்களூரு

டோலோ-650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

7th Jul 2022 12:43 AM

ADVERTISEMENT

 

டோலோ-650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபட்டது.

பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம், காய்ச்சலைக் குணமாக்கும் புகழ் பெற்ற டோலோ-650 மாத்திரையை தயாரித்து வருகிறது. பெங்களூரு, ரேஸ் கோா்ஸ் சாலையில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல புது தில்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மாநிலங்களில் உள்ள நிறுவனத்தின் 40 இடங்களில் 200க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

இதுதவிர, நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் திலீப் சுரானா, இயக்குநா் ஆனந்த் சுரானா ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சோதனையில் வரிஏய்ப்பு செய்துள்ளதற்கான பல்வேறு ஆதாரங்களை வருமான வரித் துறையினா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. கரோனா காலத்தில் 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 400 கோடி மதிப்புள்ள 350 கோடி டோலோ-650 மாத்திரைகளை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சோதனை தொழில்துறையினா் இடையே அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஒசூரிலும் சோதனை:

ஒசூரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் உள்ள இத் தொழிற்சாலையில் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தப்பட்டது. 10- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT