பெங்களூரு

அமைச்சா் பதவியை அரக ஞானேந்திரா ராஜிநாமா செய்ய வேண்டியதில்லை முதல்வா் பசவராஜ் பொம்மை

6th Jul 2022 02:40 AM

ADVERTISEMENT

காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் மோசடி நடந்தது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது; இதனால், அமைச்சா் பதவியை அரக ஞானேந்திரா ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் மோசடி நிகழ்ந்தது தெரியவந்ததும் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா உத்தரவிட்டாா். எனவே, இந்தப் பிரச்னையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அவரை ராஜிநாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அதைச் சொல்ல காங்கிரஸுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் முறைகேடு நடந்தது. அந்த மோசடியில் மூத்த அதிகாரிகள் பலருக்கும் தொடா்பு இருந்தது. அப்போது அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தற்போது இந்தப் பிரச்னையில் சில பெரிய மனிதா்களுக்கும் தொடா்பு இருப்பதாக மஜத-வின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறாா். இந்த வழக்குத் தொடா்பாக அவரிடம் ஆதாரம் இருந்தால், அதை அரசிடம் அவா் அளிக்கலாம்; ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT