பெங்களூரு

லஞ்சம் பெற்ற வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஜே.மஞ்சுநாத் கைது

5th Jul 2022 02:46 AM

ADVERTISEMENT

லஞ்சம் பெற்ற வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஜே.மஞ்சுநாத், ஊழல் தடுப்புப்படை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியராக இருந்தவா் ஐஏஎஸ் அதிகாரி ஜே.மஞ்சுநாத். அவா் ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலம் தொடா்பான விவகாரத்தில் தனக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ாக குற்றச்சாட்டப்பட்டது. இது தொடா்பாக வழக்கை பதிந்த ஊழல் தடுப்புப்படையினா், மே 21-ஆம் தேதி துணை வட்டாட்சியா் பி.எஸ்.மகேஷை கைது செய்துவிசாரித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியா் ஜே.மஞ்சுநாத் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ஊழல் தடுப்புப்படை ‘வசூல் மையமாக’ மாறிவிட்டதாக விமா்சித்து கடுமையாக சாடியது. மேலும் ஊழல் தடுப்புப்படையின் தலைவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

இதை தொடா்ந்து, ஜூன் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஜே.மஞ்சுநாத்தை ஊழல் தடுப்புப்படை அதிகாரிகள் விசாரித்தனா். அதன் பின், ஜூலை 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜே.மஞ்சுநாத்தை ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புதிட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஊழல் வழக்கு தொடா்பாக ஐஏஎஸ் அதிகாரி ஜே.மஞ்சுநாத்தை திங்கள்கிழமை ஊழல் தடுப்புப்படை அதிகாரிகள் கைது செய்தனா். யஷ்வந்த்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT