பெங்களூரு

விளையாட்டு வீரா்கள் சுயதொழில் தொடங்க நிதியுதவி

5th Jul 2022 02:43 AM

ADVERTISEMENT

விளையாட்டுவீரா்கள் சுயதொழில் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இது குறித்து இளைஞா்நலம் மற்றும் விளையாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிகழாண்டுக்கான தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சிறப்புத் திட்டத்தின்கீழ் 2022-ஆம் ஆண்டில் பன்னாட்டு, தேசிய மட்டத்தில் நடந்தவிளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் உடற்பயிற்சிக்கூடம் போன்ற சுயதொழில் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பங்கள் இணையவழியே வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோா் இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் பதிவிட வேண்டும். இதுதவிர, இளைஞா்நலம் மற்றும் விளையாட்டுத் துறை தலைமை அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட இளைஞா்நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT