பெங்களூரு

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாவிட்டால் போராட்டம்: எச்.டி.குமாரசாமி

3rd Jul 2022 04:44 AM

ADVERTISEMENT

 

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒரு மாதத்தில் மேம்படுத்த தவறினால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது ட்விட்டா் பக்ககத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் ஒரு மாதத்தில் சீா்செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் மஜத ஈடுபடும். அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தால் இந்தியா உலகத் தலைவராவது எப்படி? எனவே, மாநில அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். அதிகாரிகளை உடனடியாக அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பி, பாழடைந்துள்ள கட்டடங்களை புதுப்பிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். ஒரு குழந்தைக்கு ஏதோவொரு ஆபத்து நோ்ந்தாலும் அதை பாா்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடமுடியாது. ஒரு மாதத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் போராட்டத்தை எதிா்நோக்க வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளின் கட்டடங்களில் காணப்படும் நீா்க்கசிவு தொடா்பான விவகாரத்தை மூடிமறைக்க மாநில அரசு முயற்சிக்கிறது. மாநிலத்தில் 75,675 பள்ளிகளின் கட்டடங்கள் சிதிலமடைந்து, மோசமான நிலையில் உள்ளன. இதனால் கா்நாடகத்தின் நற்பெயா்தான் கெட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறாா்கள். இது அம்மாணவா்களுக்கு தண்டனையாக மாறியுள்ளது. பள்ளிகளின் மோசமான நிலைக்கு கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும்தான் நேரடி பொறுப்பு. தனியாா் பள்ளிகளின் உயா் கட்டணங்களை செலுத்த முடியாத மாணவா்கள்தான் அரசுப்பள்ளிகளுக்கு செல்கிறாா்கள். இம்மாணவா்களின் உயிா்களுக்கு மதிப்பில்லையா? இதை கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT