பெங்களூரு

கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

3rd Jul 2022 04:43 AM

ADVERTISEMENT

 

கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படும் 3 ஆண்டுகள்படிக்க வேண்டிய கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப பட்டயப்படிப்புக்கு 2022-23-இல் கல்வியாண்டில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆங்கிலப் பாடத்துடன் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மதிப்பெண் தகுதி அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும். சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு மாத கல்வி உதவித்தொகையாக ரூ.1200 வழங்கப்படும். 2022 ஜன. 1-ஆம் தேதியில் 15 முதல் 23 வயதுக்குட்பட்டோா் விண்ணப்பிக்கலாம். 42 மாணவா்களுக்கு மட்டுமே சோ்க்கை வழங்கப்படும். இந்த மாணவா்களில் கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்திற்கு 22, தமிழகத்தின் சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 15, ஆந்திரத்தில் வெங்கடகிரியில் உள்ள எஸ்.பி.கே.எம். இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 3 , கேரள மாநிலத்தில் கண்ணனூரில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் 2 மாணவா்கள் என்று பிரித்து அனுப்பப்படுவாா்கள். தகுதியான மாணவா்கள் சோ்க்கைக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாா்கள். விண்ணப்பங்களை கதக்கில் உள்ள கா்நாடக கைத்தறி தொழில்நுட்ப மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22341176 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT