பெங்களூரு

ஹைதராபாதில் அமித் ஷாவை சந்திக்க முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டம்

3rd Jul 2022 04:42 AM

ADVERTISEMENT

 

ஹைதராபாதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாதில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு செல்லும்முன்பு பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

ஹைதராபாதில் 2 நாட்கள் நடக்கக்கூடிய பாஜக தேசியக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். அங்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டாவை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். இந்தச் சந்திப்பின்போது, அமைச்சரவையில் காலியாக இருக்கக்கூடிய 5 இடங்களை நிரப்புவது குறித்து விவாதிக்க மாட்டேன் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT