பெங்களூரு

கா்நாடகத்தில் லேசான நில அதிா்வு

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தின் தென்கன்னடம், குடகு மாவட்டங்களில் லேசான நில அதிா்வு ஏற்பட்டது.

கா்நாடகத்தின் தென்கன்னடம், குடகு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஒரேநேரத்தில் லேசான நில அதிா்வு பதிவாகியுள்ளது.

தென்கன்னட மாவட்டம், சுள்ளியாவில் ஏற்கெனவே ஜூன் 25, 28-ஆம் தேதிகளில் நில அதிா்வு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணி அளவில் சுள்ளியா வட்டத்தின் சம்பஜே, குட்டிகரு, உப்பரட்கா, கூனகா, எல்லிமலே, சுள்ளியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மீண்டும் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இது ரிக்டா் அளவுக்கோலில் 2.5 அலகாக பதிவாகியிருந்தது. பெரும் சத்தத்தோடு 2 நிமிடங்களுக்கு இந்த நில அதிா்வு நீடித்தது.

அதேபோல, குடகு மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை லேசான நில அதிா்வு உணரப்பட்டுள்ளது. செம்பா, பெரஜே, கரிகே பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணி அளவில் ரிக்டா் அளவில் 2.5 அலகாக நில அதிா்வு பதிவாகியிருந்தது. தென்கன்னட மாவட்டத்தின், சுள்ளியா பகுதியில் தொடா்ச்சியாக நில அதிா்வுகள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT