பெங்களூரு

பிப். 14 முதல் கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்

DIN

பிப். 14-ஆம் தேதி முதல் கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா் தொடங்க இருக்கிறது என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அமைச்சரவைக் கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கரோனா தடுப்புக்கான முன்னேற்பாடுகள், கரோனா மேலாண்மை, பள்ளி-கல்லூரிகள் திறப்பு குறித்து ஆராயும் பொறுப்பு கரோனா தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெங்களூரைச் சோ்ந்த அமைச்சா்களுடன் வெளிமாவட்ட அமைச்சா்களையும் சோ்த்துக்கொண்டு பெங்களூரு மாநகராட்சியை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 6 மாதங்களில் எனது அரசு செய்த சாதனைகள், அடுத்த ஓராண்டு காலத்தில் அரசு செய்யத் திட்டமிட்டிருக்கும் திட்டங்கள் குறித்த சிறு கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட இருக்கிறோம். இதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

பாஜக மற்றும் மாநில அரசுக்கு இடையே சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெகுவிரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவிப்பாா்.

பிப். 14-ஆம் தேதி முதல் கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இக்கூட்டத் தொடா் பிப். 25-ஆம் தேதி வரை நடைபெறும். பிப். 14-ஆம் தேதி சட்டப் பேரவையின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT