பெங்களூரு

குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது அரசியல் முடிவு

DIN

 குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது அரசியல் முடிவு என முன்னாள் முதல்வா் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது ஒரு அரசியல் முடிவாகும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு பாதகமாக அமையும் என்று கருதினால், பத்மஸ்ரீ விருதை குலாம்நபி ஆசாத் ஏற்கக் கூடாது.

பிரதமா் மோடி எடுத்துள்ளது அரசியல் முடிவாகும். இந்த விருதை ஏற்பதா, வேண்டாமா என்பதை குலாம்நபி ஆசாத் தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சராக செயல்பட்டுள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா். எனவே, கட்சியின் நலனுக்கு பாதகமாக அமையாத வகையில், விருதை ஏற்பதால் உருவாகும் சாதக பாதகங்களை ஆராய்ந்து குலாம்நபி ஆசாத் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT