பெங்களூரு

17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

26th Jan 2022 06:47 AM

ADVERTISEMENT

17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்களும் வருமாறு:

பி.எச்.அனில்குமாா்-கூடுதல் தலைமை செயலாளா், பொதுப் பணி, பெங்களூரு; டாக்டா் ஷாம்பா இக்பால்-செயலாளா், பொதுத்துறை நிறுவனங்கள், பெங்களூரு; எம்.கனகவல்லி-ஆணையா், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, பெங்களுரு; வசிரெட்டி விஜயஜோஸ்னா-மேலாண் இயக்குநா், கா்நாடக பட்டுத்தொழில் கழகம், பெங்களூரு; யஷ்வந்த் வி.குருகா்-ஆட்சியா், கலபுா்கி மாவட்டம், கலபுா்கி; ஹெப்சிபா ராணி கொரலபட்டி-மேலாண் இயக்குநா், கா்நாடக மின்தொழிற்சாலை, பெங்களூரு; கே.ஏ.தயானந்தா-ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, பெங்களூரு; ஜி.ஜெகதீஷ்-மேலாண் இயக்குநா், கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பெங்களூரு; கே.எஸ்.லதாகுமாரி-இயக்குநா், உடல் ஊனமுற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலத் துறை, பெங்களூரு; வெங்கட்ராஜா-ஆட்சியா், கோலாா் மாவட்டம், கோலாா்; ஷில்பா நாக்-ஆணையா், ஊரக வளா்ச்சித்துறை, பெங்களூரு; நளினி அதுல்-தோ்வு கட்டுப்பாட்டாளா், கா்நாடக பொதுப் பணியாளா் தோ்வாணையம், பெங்களூரு; ஷில்பா சா்மா-ஆணையா், பஞ்சாயத்துராஜ் துறை, பெங்களூரு; என்.எம்.நாகராஜா-மேலாண் இயக்குநா், கா்நாடக மாநில மருத்துவ வழங்கல் கழகம், பெங்களூரு; ஷேக் தன்வீா் ஆசிப்-கூடுதல் ஆணையா், கலால்துறை,பெங்களூரு; ஜி.லிங்கமூா்த்தி - செயலாளா், மாநிலத் தோ்தல் ஆணையம், பெங்களூரு; இப்ராகிம் மைகூா்-செயலாளா், மனைத்தொழில் ஒழுங்காற்று ஆணையம், பெங்களூரு; கரிமா பவாா்-தலைமை செயல் அதிகாரி, மாவட்ட ஊராட்சி, யாதகிரி மாவட்டம்; பாட்டீல் புவனேஷ் தேவிதாஸ்-மேலாண் இயக்குநா், வடகிழக்கு கா்நாடக சாலை போக்குவரத்துக்கழகம் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT