பெங்களூரு

ராணுவத்தில் தொழிற்பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

ராணுவத்தில் தொழிற்பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து 515 ராணுவத் தளவாட பட்டறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவத் தளவாட பட்டறையில் ஃபிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வெல்டா், மெஷினிஸ்ட் கிரைண்டா், மெக்கானிக் மெஷின்டூல் பராமரிப்பு, டூல் அண்ட் டை, எலெக்ட்ரீஷியன்,ஷீட்மெட்டல் வேலையாள் போன்ற வேலைகளுக்கு காலியாக உள்ள 80 தொழிற்பயிற்சியாளா் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர ஆா்வமுள்ள, தொழிற்பயிற்சி மைய (ஐடிஐ)சான்றிதழ் (என்சிவிடி பாடத் திட்டம்) பெற்றுள்ளோா் கட்டளை அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநா், 515 ராணுவத் தளவாட பட்டறை, அல்சூரு, பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு ஜன. 25-ஆம் தேதிக்குள் சுய விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ஷீட்மெட்டல்வேலையாள் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதர வேலைகளுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இப் பயிற்சி பெறுவோருக்கு சட்ட விதிகளின்படி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படும்.

நோ்காணல் அல்லது தோ்வு எழுத வரும்போது அதற்கான பயணப்படி, உணவுப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தை அணுகவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT