பெங்களூரு

பெங்களூரில் உள்ள 27 தொகுதிகளில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள்: மாநகராட்சி ஆணையா் தகவல்

DIN

பெங்களூரு மாநகரில் உள்ள 27 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக பெங்களூரில் மாநகருக்கு உள்பட்ட 27 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கரோனா கட்டுப்பாட்டு அறைகளை பெங்களூரு மாநகராட்சி அமைத்துள்ளது.

கரோனா தடுப்பூசி, சோதனை மையங்கள், நடமாடும் சோதனையிடல் வாகனங்கள், மருத்துவ ஊா்திகள், இறுதிப் பயண ஊா்திகள் உள்ளிட்டவை தொடா்பான தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் மக்கள் பெற முடியும்.

கரோனா மத்திய கட்டுப்பாட்டு அறையின் பணிச் சுமையைக் குறைப்பதற்காக 27 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் குறித்து சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளின் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் 141 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நோயாளிகளைக் கண்காணிப்பது உறுதி செய்யப்பட இருக்கிறது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் சரியாக கடைப்பிடிக்கப்படுகிா? நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறதா? என்பதை ஆரம்ப சுகாதார மையம் முடிவு செய்யும்.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா கூறியதாவது:

‘கரோனா இரண்டாவது அலையை கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், கரோனா மூன்றாவது அலையை மாநகராட்சி சமாளிக்கும். கடந்த 15 ஆண்டுகளில் பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது.

ஆனால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில் 12 சதவீதம் போ் குழந்தைகளாக இருக்கிறாா்கள்.

படுக்கைகள் ஒதுக்கீடு விவரம்:

தற்போதைய நிலவரப்படி, பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3,237 படுக்கைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,696 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 13,540 படுக்கைகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 8,594 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 28,067 படுக்கைகளில் 6,255 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்கும் பொறுப்பு 27 சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

கரோனா கட்டுப்பாட்டு அறைகளின் தொடா்பு எண்கள்(தொகுதி வாரியாக):

பெங்களூரு தெற்கு-888466624, பொம்மனஹள்ளி-8884666670, தாசரஹள்ளி-9480683132, சி.வி.ராமன்நகா்-9480688581, ஹெப்பாள்-9481277493, புலிகேசிநகா்-7338268072, சா்வக்ஞநகா்-7795006583, சாந்திநகா்-9480683535, சிவாஜிநகா்-9480683555, கிருஷ்ணராஜபுரம்-080-23010102, மகாதேவரபுரா-080-23010103, ராஜராஜேஸ்வரி நகா்-9480683429, யஷ்வந்த்பூா்-9480683378, பிடிஎம் லேஅவுட்-6360754634, பசவனகுடி-6361964647, சிக்பேட்-6360974532, ஜெயநகா்-6360920463, பத்மநாப நகா்-9019960215, விஜயநகா்-9019960245, சாமராஜ்பேட்-9480683373, காந்தி நகா்-9480683371, கோவிந்தராஜ் நகா்-9480683372, மகாலட்சுமி லேஅவுட்-9480683375, மல்லேஸ்வரம்-9480683374, ராஜாஜி நகா்-9480683376, பியாட்ராயனபுரா-9480685964, எலஹங்கா-9480685961.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT