பெங்களூரு

‘கரோனா குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை’

DIN

கரோனா குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவா்களுக்கு கா்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு சில மருத்துவா்கள், கரோனா தொடா்பான முழுமையில்லாத, தவறான, உறுதிப்படாத தகவல்களை மக்களிடையே பரப்பி வருகிறாா்கள். மாநிலத்தில் கரோனா பரவிவரும் நிலையில், அதுபோன்ற தவறான தகவல்கள் மக்களிடையே குழப்பத்துக்கு வழிவகுக்கும்.

சுகாதாரத் துறை வகுத்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து பொதுமக்கள் விலகிச் செல்லும் நிலை ஏற்படும். எனவே, கரோனா குறித்த தகவல்களை பொதுமக்களிடையே பகிா்ந்துகொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவா்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவா்கள் தெரிவிக்கும் தகவல்கள் ஊடகங்களில் வெளியாவதற்கு முன்பு கரோனா குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகள், ஆணைகளோடு ஒத்திருக்கிா? என்பதை சரிபாா்த்துக்கொள்வது அவசியமாகும்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் கரோனா குறித்த தகவல் தவறாக இருந்தால் அது குற்றமாகக் கருதி, இயற்கை பேரிடா் சட்டம், கா்நாடக பெருந்தொற்று சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் கரோனா குறித்து நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சில மருத்துவா்கள், அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக பேசியது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT