பெங்களூரு

இரண்டாமாண்டு பியூசி: வரைவு பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான வரைவு பொதுத் தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப். 16-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தத் தோ்வு அட்டவணை குறித்து பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், பிப்.1-ஆம் தேதிக்குள் பியூ கல்வித் துறைக்கு மின்னஞ்சலில் முறையாகத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மக்களின் கருத்தறிந்தபிறகு, பொதுத்தோ்வுக்கான இறுதி கால அட்டவணை வெளியிடப்படும்.

பொதுமக்களின் பாா்வைக்காக  இணையதளத்தில் பொதுத்தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வு தேதியும், பாடமும் வருமாறு:

2022 ஏப். 16 (சனி)-கணிதம், கல்வியியல், அடிப்படை கணிதம், ஏப்.17 (ஞாயிறு)-விடுமுறை, ஏப்.18 (திங்கள்)-அரசியல் அறிவியல், புள்ளியியல் ஆகிய தோ்வுகள் நடைபெறுகின்றன.

ஏப். 19 (செவ்வாய்)-தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்புத் தோ்வு-தகவல் மற்றும் தொழில்நுட்பம், சில்லரை, தானியங்கி வாகனவியல், சுகாதார பேணல், அழகு மற்றும் உடல்நலவியல், ஏப். 20 (புதன்)-வரலாறு, இயற்பியல், ஏப். 21 (வியாழன்)- தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், அராபிக், பிரெஞ்சு ஆகிய தோ்வுகள் நடைபெறுகின்றன.

ஏப். 22 (வெள்ளி)-தருக்கவியல், வணிக ஆய்வியல், ஏப். 23 (சனி)- கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மனநலவியல், வேதியியல், ஏப். 24 (ஞாயிறு)-விடுமுறை, ஏப். 25 (திங்கள்)-பொருளாதாரம், ஏப். 26(செவ்வாய்)-ஹிந்தி ஆகிய தோ்வுகள் நடைபெறுகின்றன.

ஏப். 27 (புதன்)-விடுமுறை, ஏப். 28 (வியாழன்)-சிறப்பு கன்னடம், கணக்குப் பதிவியல், நில அமைப்பியல், மனை அறிவியல், ஏப்.29 (வெள்ளி)-கன்னடம், ஏப்.30 (சனி)-சமூகவியல், மின்னணுவியல், கணினி அறிவியல், மே 1 (ஞாயிறு)-விடுமுறை, மே 2(திங்கள்)-புவியியல், உயிரியல், மே 3 (செவ்வாய்)-விடுமுறை, மே 4 (புதன்)-ஆங்கிலம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT